முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிபெருக்கி வைத்து இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூலை.14 - மதுரை மாவட்டத்தில் ஒலிபெருக்கி வைத்து அதிக இரைச்சலை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சகாயம் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,  ஒலிபெருக்கியால் ஏற்படும் ஒலி மாசு காது நரம்புகள், மூளைதிறன், மனநிலையை பாதிக்கும். மேலும், தலைவலியோடு ரத்த கொதிப்பையும் ஏற்படுத்தும்.  இதனால் நோயாளிகள் மற்றும் மாணவர்கள் பெரும் பாதிப்பு அடைவார்கள். ஒலிபெருக்கி அமைப்பவர்கள் காவல்துறையின் அனுமதி பெற்ற பின்னரே அமைக்கவேண்டும். அனுமதி பெற்றிருப்பினும் குறிப்பிட்ட மேல் ஒலி எழுப்பக்கூடாது.  மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், இறைவழிபாட்டு தலங்களுக்கு அருகில் ஒலி பெருக்கி வைக்கக்கூடாது. இரவு 10 மணிக்கு மேல் எந்த இடத்திலும் ஒலிபெருக்கி வைக்கக்கூடாது.  மேலும், ஒரு இடத்தில் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேல் ஒலிபெருக்கி உபயோகிக்கக்கூடாது. முறையாற்று உரத்த வெடிவெடிப்பது கூடாது. வாகனங்கள் காற்று ஒலிப்பான்கள் பொருத்தக்கூடாது. நகர்புறங்களில் காற்றொலிப்பான்களை உபயோகிக்ககூடாது. இந்த விதிமுறைகளை மீறி ஒலி மாசு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும், அந்த உபகரணங்களும் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்