முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன்: சானியா மிர்சா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்

வெள்ளிக்கிழமை, 29 ஜனவரி 2016      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - மெல்போர்னில் நடைப்பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா - சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. இது இவர்களின் 36 தொடர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியாக நடைபெற்று வரும்  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி, பெண்கள் இரட்டையரில்  முதல் நிலை ஜோடியான இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ்  ஜோடி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில்,  தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள செக். குடியரசின் அன்ட்ரியா, லூஸி ஹரடெக்கா ஜோடியுடன் மோதியது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டை சானியா - ஹிங்கிஸ் இணை 7-6 என்ற கணக்கில் வென்றது.

தொடர்ந்து 2-வது செட்டை 6-3 என்ற கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த ஜோடி தொடர்ந்து 3-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்த ஜோடி சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஹாட்ரிக் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இதற்கு முன் கடந்த ஆண்டு விம்பிள்டன், அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றனர். இந்த தொடர் வெற்றிகளால் மிகுந்த உற்சாகமடைந்துள்ள சானியா மிர்சா, தனது இணை மார்ட்டினா ஹிங்கிசை வெகுவாகப் பாராட்டி நன்றி தெரிவித்தார். இருவரும் இணைந்து கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடியதாகவும், தற்போதும் அதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் கூறினார். மார்ட்டினா ஒரு அற்புதமான வீராங்கனை, அவருடன் விளையாடுவது அற்புதமானது என்றும் சானியா குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்