முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர் படகுகளை ஒரு போதும் விடுவிக்க மாட்டோம்: இலங்கை அமைச்சர் சமரவீரா

திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

கொழும்பு - தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை ஒருபோதும் திருப்பி கொடுக்க மாட்டோம். என்று இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் சமரவீரா தெரிவித்துள்ளார். இலங்கை மட்டக்களப்பில் மீன் பண்ணை தொடக்க விழா நடைபெற்றது. இதில் இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் சமரவீரா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– இந்திய மீனவர்களால் இலங்கை உள்நாட்டின் மீன் வளம் அழிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுற்றுசூழலுக்கும் ஆபத்தான நிலையை ஏற்படுத்துகின்றனர்.

அவர்களுடைய அத்துமீறல் தொடர்ந்து நடந்து வருகிறது. இது சம்பந்தமாக இந்தியாவில் இருந்து வந்திருந்த வெளியுறவுத்துறை அமைச்சரிடம் எடுத்து கூறியிருக்கிறோம். அவர் இது பற்றி பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளார். பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்களிடம் இருந்து பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை ஒருபோதும் திருப்பி கொடுக்க மாட்டோம். எங்களுடைய இயற்கை வளத்தை பாதுகாப்பது மிக முக்கியமானது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்