எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாடகி பி.சுசிலாவுக்கு 7 தாய்மொழிகள்: கவிஞர் வைரமுத்து பேச்சு
பாடகி பி.சுசிலாவுக்கு 7 தாய்மொழிகள்: கவிஞர் வைரமுத்து பேச்சு
17595 பாடல்கள் பாடி கின்னஸ் - உலக சாதனை பதிவேட்டில், பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள் இடம்பெற்றிருப்பது, அவருக்கு மட்டும் பெருமை அல்ல, உலகத்திலேயே அதிகமாக பாடல்களை பாடிய பாடகி இந்தியாவில் இருக்கிறார் என்பதால் அது இந்தியாவிற்க்கே பெருமை. அவர் தமிழ்நாட்டு தலைநகரத்தில் வாழ்கிறார், தமிழ் பாட்டு பாடுகிறார், தமிழர்களோடு வாழ்கிறார் என்பது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை. பாடகி பி.சுசிலா அம்மையார் புகழை காலம் தாழ்ந்து நாம் பதிவு செய்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.
எத்தனை மொழிகளில் பாடினாலும், அத்தனை மொழிகளிலும் துல்லியம், அழகு, மேன்னை முன்றையும் கொண்டு வரும் ஆற்றல் பாடகி பி.சுசிலா அம்மையாருக்கு உண்டு. நம் அத்தனை பேருக்கும் ஒரே ஒரு தாய்மொழிதான் உண்டு, ஆனால் பாடகி பி.சுசிலா அம்மையாருக்கு 7 தாய்மொழிகள். அவை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம் மற்றும் ஒரியா. 7 மொழிகளை தாய் மொழிகளாக கொண்டதை போல் பாடுபவர் பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள். 1953ல் தனது முதல் பாடலை பாடினார், அந்த ஆண்டு தான் நான் பிறந்தேன். இதற்கு என்ன காரணம் என்றால், என்னை போன்றவர்களுக்கு அவர் பாடிய பாட்டுதான் தாலாட்டாக இருக்கவேண்டும் என்று காலம் விதித்திருக்கிறது.
அவரது தமிழ் பாடல்களில் உள்ள உச்சரிப்பின் துல்லியம், தமிழின் மேன்மை, சொற்களின் சுத்தம் ஆகியவை அவருக்கு மட்டுமே உரியது. உதாரணத்திற்கு, மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்ற பாட்டில் சொற்களை மட்டும் அல்ல, ஒலிக்குறிப்பை கூட பாடியிருக்கிறார், விசும்பலை பாடியிருக்கிறார்.
எனக்கும் மிகவும் பிடித்த "என்னை நினைத்து என்னை அழைத்தாயோ" என்ற பாடல், படத்தோடு பார்க்கையில் கண்ணீர் வரும், அப்படியென்றால நடித்தவர்கள் அழ வைக்கிறார்கள் என்று அர்த்தம். அந்த பாட்டை செவியில் கேட்டாலும் அழுகை வரும், அப்படியென்றால் சுசிலா நம்மை அழ வைக்கிறார் என்று அர்த்தம். அப்படியெல்லாம் இந்த மண்ணுக்கு புகழை சேர்த்தவர் பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் மற்றொன்று "கண்ணுக்கு மை அழகு" பாடல். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த பாடலை யார் வைத்து பாட வைக்கலாம் என்று கேட்டார். அதற்கு நான், உங்களது இசையில் பாடகி சுசிலா அம்மையார் பாடவேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு, அதற்கு பொருத்தமான பாட்டு இதுதான் என்றேன். ஏன் இந்த பாட்டு பொருத்தம் என்று அவர் கேட்டார். தமிழுக்கு சிறப்பான "ழ" எழுத்து இப்பாட்டில் அதிகம் வருகிறது, அந்த "ழ" எழுத்தை உச்சரிப்பதில் பாடகி சுசிலா அம்மையார் அவர்களுக்கு இணை அவர் மட்டுமே என்றேன். தமிழுக்கு சிறப்பு "ழ"கரம், இசைக்கு சிறப்பு பாடகி சுசிலா அம்மையார்.
பாடகி சுசிலா அம்மையாரின் வரலாறு மிகப் பெரிது, 1950களில் பாட வந்தவர் சுசிலா. பல இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள், ரசிகர்கள், தலைமுறைகள் என அனைத்து மாறி இருக்கிறது. இத்தனையும் தாண்டி முன்று தலைமுறைக்கு தனது இசை பங்களிப்பை செய்தவர் சுசிலா அம்மையார்.
இசை என்பது பயிற்சியால் வந்துவிடும், குரல் என்பது இயற்கையின் கொடை. அந்த இயற்க்கையின் கொடையாக தனக்கு வழங்கப்பட்ட குரலை இந்திய மக்களுக்கெல்லாம் மகிழ்ச்சிப்படுவதற்கும், அமைதிபடுத்துவதற்கும், அன்பு செலுத்துவதற்கும் பயன்படுத்தி இருக்கிறார்.
இவரின் குரல் இல்லையென்றால் பல பேருக்கு காயங்கள் ஆறி இருக்காது. பலரது கண்ணீரை துடைத்த குரல், பலரை நிம்மதியாக உறங்க வைத்த குரல், பலரை காதலிக்க வைத்த குரல், பலரது சண்டைகளை தீர்த்து வைத்த குரல், பல மேடைகளில் தாலாட்டிய குரல், சுசிலா அம்மையாரின் குரல். இவரது குரல் இந்த சமுகத்திற்கு செய்த பணி மிகப்பெரியது. இவரின் குரலால் காற்று தன்னைத்தானே தாலாட்டிக்கொண்டு தூங்கவைத்துக் கொள்கிறது என்று சொல்லவேண்டும். சுசிலா அம்மையாரின் தலைமுறை தாண்டிய குரலுக்கு எனது தலைவணக்கத்தை நான் தெரிவித்து கொள்கிறேன்.
பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும், உயர்ந்த புகழை பெற வேண்டும், இவர் வாழும் காலத்தில் நாமெல்லாம் வாழ்கிறோம் என்பதே நமக்கு பெரிய பெருமை. வாழும் காலத்திலேயே பெருமை எல்லோரையும் தேடி வாராது, அந்த பெருமை பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்களுக்கு வந்திருக்கிறது. அவரால் இந்தியா பெருமை பெருகிறது. தமிழ் கலை பெருமை பெருகிறது. உலகம் முழுவதும் இருக்கும் ரசிக பெருமக்கள் என் மூலமாக அவருக்கு வாழ்த்து சொல்கிறார்கள்.
பாடகி பி.சுசிலா அம்மையார் பேச்சு :-
என் அன்பார்ந்த ரசிகர்களுக்கும், கலைஞர்களுக்கும், பாடகர் பாடகிகளுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் மற்றும் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சில நாட்களுக்கு முன் சிலோனுக்கு என்னை அழைத்து, எனக்கு கம்பன் விருது கொடுத்து கவுரவித்தனர். அந்நேரத்தில் ஒரு விட்டின் வாசலில் புத்தர் சிலையை கண்டு அதை என் விட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் சற்றும் எதிர்பாரவிதத்தில் கவிஞர் வைரமுத்து எனக்கு இன்று புத்தர் சிலையை பரிசளித்தது மிகவும் ஆச்சர்யமாகவுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 5 days ago |
-
போராட்டத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
02 May 2025சென்னை : அங்கன்வாடி ஊழியர்களுக்கு, அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார
-
கள்ளழகர் இறங்கும் வைபவம்: பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
02 May 2025மதுரை, வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும்போது பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு பொருளாதார தடை: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
02 May 2025வாஷிங்டன், ஈரான் நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
ஒரே இரவில் உக்ரைனின் 121 டிரோன்களை வீழ்த்திய ரஷ்யா
02 May 2025மாஸ்கோ, ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் பறந்த உக்ரைனின் 121 டிரோன்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
-
நடிகர் சங்க கட்டட திறப்பு விழா: தேதியை அறிவித்தார் விஷால்
02 May 2025சென்னை, நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா தேதியை விஷால் அறிவித்துள்ளார்.
-
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் மண்டபங்கள் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
02 May 2025திருவேற்காடு, பூந்தமல்லி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில், கருங்கல் கருவறை வாசற்கால் நிறுவும் பணி மற்றும் ரூ.17.47 கோடி மதிப்பில் 3 புதிய ராஜகோபுரங்கள், 2 முன்
-
காஷ்மீர் பஹல்காம் தாக்குதல்: பாக்., ராணுவம், ஐ.எஸ்.ஐ., லஷ்கர் பயங்கரவாதிகள் தொடர்பு அம்பலம்
02 May 2025புதுடில்லி : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் ஐ.எஸ்.ஐ., மற்றும் லஷ்கர் பயங்கரவாதிகள், பாக்., ராணுவத்தினர் தொடர்பு அம்பலம் ஆகி உள்ளது.&nbs
-
கர்நாடகா, தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதிகள் சென்னைக்கு மாற்றம்
02 May 2025சென்னை : கர்நாடகா, தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதிகள் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
-
கேதார்நாத் கோவில் நடை திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
02 May 2025டேராடூன் : கேதார்நாத் கோயிலின் நடை நேற்று கோலாகலமாகத் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
-
7 வீடுகள் கட்டி வாடகைக்கு விட்ட வங்கதேச ஆசாமி: போலீஸ் விசாரணையில் சிக்கினார்
02 May 2025திருப்பூர் : பல்லடம் அருகே நிதி நிறுவனத்தால் 7 வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில், திடீர் திருப்பமாக அதன் உரிமையாளர் சட்டவிரோத குடியேற்ற சட்டத்தின் கீழ் கை
-
மதுரை சித்திரை திருவிழா: அதிக விசைத்திறன் கொண்ட குழாய்களை பயன்படுத்த வேண்டாம்: கோவில் நிர்வாகம்
02 May 2025மதுரை : மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அதிக விசைத்திறன் கொண்ட குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக் கூடாது என அழகர் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியு
-
ரேடியோக்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்
02 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ரேடியோக்களில் இந்திய பாடல்களை ஒலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவின் மிரட்டல் பலிக்காது: சீனா எச்சரிக்கை
02 May 2025பெய்ஜிங், வரி விதிப்பு குறித்து சீனாவுடன் அமெரிக்கா நடத்த விரும்பும் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்க மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள
-
மும்பை அணிக்காக 6,000 ரன்கள்: ரோகித் சர்மா புதிய சாதனை
02 May 2025ஜெய்பூர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா 6,000 ரன்களை கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
குடும்பங்களை, சமூகத்தை வழிநடத்த முதியோர் நல்வாழ்வு அவசியம் : ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
02 May 2025புதுடெல்லி : ஞானம் மற்றும் பாரம்பரியத்தின் தூண்களாக மூத்த குடிமக்கள் விளங்குவதாகவும், குடும்பங்களை, சமூகத்தை வழிநடத்த அவர்களின் நல்வாழ்வு அவசியம் என்றும் ஜனாதிபதிதிரவுப
-
ரூ. 8,867 கோடியில் கட்டப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
02 May 2025விழிஞ்சம் : கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ.
-
சூர்யகுமார் யாதவ் சாதனை
02 May 202518-வது ஐ.பி.எல்.
-
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மே 6ல் கனமழை பெய்ய வாய்ப்பு
02 May 2025சென்னை : தமிழகத்தில் மே 6ம் தேதி நீலகிரி, கோவை, மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறை: விருதை பகிர்ந்து கொண்ட மும்பை வீரர்கள்
02 May 2025மும்பை : ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக இரு வீரர்கள் சூப்பர் ஸ்டிரைக்கர் விருதைப் பகிர்ந்துகொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிகரிக்கும் தெரு நாய்க்கடி தொல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
02 May 2025சென்னை : தெரு நாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
-
அடுத்த மாதம் தேர்தல்: தென்கொரிய அதிபர் ராஜினாமா
02 May 2025சியோல், அடுத்த மாதம் தென்கொரியவில் தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்த நாட்டு அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.
-
தகவல் தொழில்நுட்பத்தில் காவல்துறை பின்தங்கியுள்ளது: சென்னை உயர் நீதிமன்றம் வேதனை
02 May 2025சென்னை, தகவல் தொழில்நுட்பத்தில் காவல்துறை பின்தங்கியுள்ளதாக உயர் நீதி மன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
-
கொலை வழக்கில் குவைத்தில் இந்தியருக்கு தூக்கு
02 May 2025அகமதாபாத், கொலை வழக்கில் இந்தியர் ஒருவருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
-
போக்சோ புகார்களில் இனி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 4 நாட்களில் இடைநீக்கம்
02 May 2025சென்னை : தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் அவர்கள் 4 நாட்களுக
-
சி.எஸ்.கே. வெளியேற்றம்: பயிற்சியாளர் ஹஸி கருத்து
02 May 2025சென்னை ஐ.பி.எல்.