முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு, ஆக. 6 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கொழும்பு நகரில் நடைபெற்ற 5 -வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொ டர் 3 - 2  என்ற கணக்கில் முடிவடைந்துள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில், ஜெயவர்த்தனே மற்று ம் சமரவீரா ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஆல்ரவுண்டர் மேத்யூஸ் அவர்களுக்கு பக்கபலமாக ஆடினார். 

முன்னதாக பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாள ரான மலிங்கா மற்றும் மென்டிஸ் இருவரும் நன்கு பந்து வீசி தலா 3 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினர். எரங்கா, பிரசன்னா, மற்றும் மேத்யூஸ் ஆகியோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசினர். 

இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 -வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு நகரில் உள்ள ஆர். பிரேமதாசா அரங்கத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 211 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் அரை சதமும், 3 வீரர்கள் கால் சதமும் அடித்தனர். 

துவக்க வீரர் வாட்சன் அதிகபட்சமாக 84 பந்தில் 56 ரன்னையும், கேப் டன் கிளார்க் 67 பந்தில் 47 ரன்னையும், ஜே. ஹஸ்சே 49 பந்தில் 46 ரன் னையும், ரிக்கி பாண்டிங் 31 ரன்னையும் எடுத்தனர்.  

இலங்கை அணி தரப்பில் மலிங்கா 35 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். மென்டிஸ் 49 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, எரங்கா 2 விக்கெட்டையும், பிரசன்னா மற்றும் மேத்யூஸ் ஆகி யோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். 

இலங்கை அணி 212 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை ஆஸ்திரேலிய அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 47 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்னை எடுத்தது. 

இதனால் இலங்கை அணி இந்த 5 -வது மற்றும் கடைசி போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டி கள் கொண்ட இந்தத் தொடர் 3 - 2 என்ற கணக்கில் முடிவடைந்துள்ளது. 

இலங்கை அணி சார்பில், ஜெயவர்த்தனே 119 பந்தில் 71 ரன்னை எடுத் தார். சமரசில்வா 71 பந்தில் 63 ரன்னை எடுத்தார். தவிர, மேத்யூஸ் 49 பந்தில் 26 ரன்னையும், கேப்டன் தில்ஷான் 17 ரன்னையும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், பட்டின்சன் மற்றும் டொகெர்டி இருவ ரும் தலா 2 விக்கெட் எடுத்தனர். ஜான்சன் மற்றும் வாட்சன் இருவரும் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக மலிங்காவும், தொடர் நாயகனாக மைக்கேல் கிளார்க்கும் தேர்வு செ ய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்