முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைனில் 20கேள்விகளுக்கு பதிலளித்தால் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கலாம்

வெள்ளிக்கிழமை, 27 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  ஆன்லைனில் கேட்கப்படும் 20கேள்விகளுக்கு பதிலளித்தால் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கும்  வாய்ப்பை பெறலாம். அப்போது மோடி தனது கையெழுத்திட்ட சான்றிதழையும் வெற்றியாளர்களுக்கு வழங்குகிறார். மத்திய அரசுக்கு MyGov.in  என்ற இணைய தளம் உள்ளது. இதில் அரசு நிர்வாகம் சம்பந்தமான கேள்வி பதில் போட்டி நடத்தப்படுகிறது. அதில் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட திட்டங்கள் மற்றும் நிர்வாக மேம்பாடு குறித்து மக்கள் எந்த அளவிற்கு அறிந்திருக்கிறார்கள் என்பது குறித்து கேள்விகள் கேட்கப்படுகின்றன,.

இதில் 20கேள்விகளை தோராயமாக தேர்வு செய்து, அதற்கு பதலளிக்க வேண்டும். ஒரு போட்டியாளருக்கும் இன் னொரு போட்டியாளருக்கும் உரிய கேள்விகள் ஒரே மாதிரியாக இருக்கும் என்ற நிலை இருக்காது. சூரிய ஒளி மின்சாரம், 2015-16ம் ஆண்டில் இடம் பெற்றுள்ள திறன் மேம்பாடு, பயனாளிகளுக்கு நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்ட தொகை, வேளாண் விஞ்ஞானிகள் 3வது ஆண்டில் பெறும் தொகை, மத்திய அரசின் பெட் பச்சோ, பேடி பாந்தோ திட்டம் இடம் பெற்ற மாவட்டங்களின் எண்ணிக்கை போன்ற 20கேள்விகள் கேட்கப்படும்.

போட்டியில் பங்கேற்கும் நபர்கள்  அரசு ஆன்லைனில் அரசின் திட்டம் குறித்த நான்கு வாய்ப்பு நிலைகளில் ஒன்றை தேர்வு செய்து பதிலளிக்கலாம். போட்டியில் அதிக கேள்விகளுக்கு பதிலளிக்கும் நபர்கள் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரே மாதிரியான பதில்களை பலரும் அளித்திருந்தால், குறைந்த நேரத்தில் அரசின் திட்டங்கள் குறித்து பதில் அளித்த நபர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். கஷ்டமான கேள்விகளுக்கு பின்னர் பதிலளிக்கும் வாய்ப்பும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்