முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதி கசாப் வேண்டுகோளை பரிசீலிக்க சுப்ரீம்கோர்ட்டு சம்மதம்

வெள்ளிக்கிழமை, 2 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,செப்.- 3 - மும்பையில் தாக்குதல் நடத்திய வழக்கில் தூக்குத்தண்டனை விதித்திருப்பதை பரிசீலனை செய்ய வேண்டும் என்று தீவிரவாதி கசாப் வேண்டுகோளை பரிசீலிக்க சுப்ரீம்கோர்ட்டு சம்மதம் தெரிவித்துள்ளது. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கராச்சி வழியாக மும்பை கடற்கரையில் இறங்கி நகருக்குள் ஊடுருவினர். தாஜ் மஹால் ஓட்டல், ஓபராய் ஓட்டல், கேமா மருத்துவமனை, நாரிமன் ஹவுஸ், சிஎஸ்டி ரயில் நிலையம் ஆகிய இடங்களில் அந்த 10 தீவிரவாதிகளும் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையொட்டி நடந்த சண்டையில் போலீஸ் உயரதிகாரி உள்பட 160-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் பலியானார்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். தீவிரவாதிகள் 10 பேரில் கசாப் ஒருவன் மட்டும் உயிருடன் பிடிபட்டான். இதுதொடர்பான வழக்கில் மும்பை தீவிரவாத எதிர்ப்பு கோர்ட்டு கசாப்புக்கு தூக்குத்தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிரத்து மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தான். ஐகோர்ட்டும் கசாப்புக்கு தூக்குத்தண்டனையை உறுதி செய்தது. இதையும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டிற்கு கசாப் கடிதம் எழுதியுள்ளான். அந்த கடிதத்தை பரிசீலிப்பதாக சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது. கசாப்பின் கடிதம் பரிசீலனையில் இருப்பதாகவும் சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்