முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் உள்பட மத்திய மந்திரிகள் சொத்து விபரம் பணக்கார அமைச்சர் கமல்நாத்

ஞாயிற்றுக்கிழமை, 4 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, செப்.- 4 - பிரதமர் மன்மோகன் சிங் உள்பட மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் கமல்நாத் முதல் இடத்திலும் மு.க. அழகிரி இரண்டாவது இடத்திலும் இருக்கிறார். கமல்நாத்தின் சொத்து மதிப்பு ரூ.263 கோடியாகும். மு.க.அழகிரியின் சொத்து மதிப்பு ரூ.30 கோடியாகும். நாட்டில் ஊழல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்கும் நடவடிக்கையாக மத்திய அமைச்சர்கள் சொத்து விபரத்தை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். அதன்படி பிரதமர் மன்மோகன் சிங்கும் சொத்து விபரத்தை வெளியிட்டுள்ளார். மேலும் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கமல்நாத், ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், மு.க.அழகிரி, ஏ.கே. அந்தோணி ஆகியோர் தங்களுடைய சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங்கின் சொத்து மதிப்பு ரூ.4.8 கோடியாகும். இவருக்கு பஞ்சாப் மாநிலத்தில் 2 வீடுகள் உள்ளன. மேலும் வங்கியில் நிரந்த டெபாசிட்டாக ரூ.3.2 கோடி இருக்கிறது. அமைச்சர் கமல்நாத்தின் சொத்து மதிப்பு ரூ. 263 கோடியாகும். சொத்து மதிப்பை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர்களில் இவர்தான் பணக்கார அமைச்சராக இருக்கிறார். இவருக்கு வீடுகள், நிறுவனங்கள் மற்றும் பரம்பரை சொத்துக்கள் உள்ளன. அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ.11 கோடியாகும். இவருக்கு சிவகங்கை,டெல்லி ஆகிய இடங்களில் வீடுகள் உள்ளன. காபி எஸ்டேட் உள்ளது. 4 கார்கள் உள்ளன. மேலும் இவரது மனைவி பெயரில் 11.80 கோடி சொத்துக்கள் உள்ளன. அமைச்சர் கபில் சிபல் சொத்து மதிப்பு ரூ.16 கோடியாகும். இவருக்கு வீடு, நிலம், நகை ஆகியவைகள் சொத்துக்களாக உள்ளன. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் சொத்து மதிப்பு ரூ. 1.25 கோடியாகும். அமைச்சர் சரத்பவாரின் சொத்து மதிப்பு ரூ.12 கோடியாகும். அமைச்சர் ஜி.கே.வாசன் சொத்து மதிப்பு ரூ.3 கோடியாகும். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனும் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் சொத்து மதிப்பு ரூ.30 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பலமுறை கேட்டுக்கொண்டும் இன்னும் 18 அமைச்சர்கள் தங்களுடைய சொத்து விபரத்தை அறிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்