முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிடல் காஸ்ட்ரோவின் மறைவு - டிசம்பர் 4 இறுதிச் சடங்கு : கியூபா அரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 26 நவம்பர் 2016      உலகம்
Image Unavailable

ஹவானா : பிடல் காஸ்ட்ரோ இறுதி சடங்கு டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் என கியூபா அரசு தெரிவித்துள்ளது. காஸ்ட்ரோ மறைவை யொட்டி கியூபாவில் 9 நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று கியூபா அதிபர் கூறியுள்ளார்.

50 ஆண்டுகளை தனது கையில் வைத்து இருந்த, கியூபாவில் கம்யூனிசத்தை நிறுவிய அந்த சரித்திர நாயகன் பிடல் காஸ்ட்ரோ காலமாகிவிட்டார் .அமெரிக்காவை துணிச்சலுடன் எதிர்த்து வந்தவர். இவர் இறந்த செய்தியை அவரது சகோதரரும், தற்போதைய அதிபருமான ராவுல் காஸ்ட்ரோ அந்த நாட்டின் தொலைக்காட்சி மூலம் அறிவித்தார்.

புரட்சித்தலைவனாக மக்களால் போற்றப்பட்ட பிடல் காஸ்ட்ரோவின் மரணம் கியூபா மக்களை மட்டுமல்ல இந்தியாவில் உள்ள புரட்சியின் நேசிப்பாளர்களையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.பிடல் காஸ்ட்ரோவின் மரணத்திற்கு 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கிறது கியூபா அரசு. அவரது இறுதிச்சடங்கு டிசம்பர் 4ம் தேதி ஞாயிறன்று நடைபெறும் என்ற அவரது சகோதரரும் கியூபா அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். நேற்று  முதல் கியூபாவில் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுவதால் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். அனைத்து அரசு நிகழ்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் ரவுல் காஸ்ட்ரோ கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்