முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ள நோட்டுகளை தடுக்க பிளாஸ்டிக் கரன்சி : மத்திய அரசு வெளியிடுகிறது

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - கள்ள நோட்டுகளை தடுக்க மத்திய அரசு விரைவில் கிழியாத பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் லோக்சபாவில் தெரிவித்தார்.  நாட்டில் உள்ள கறுப்புப்பணம், வரி ஏய்ப்பு, கள்ள நோட்டு ஆகியவற்றால் நாட்டில் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.

இந்த  பழைய நோட்டுகள் செல்லாது என்ற அரசின் முடிவால் கள்ள நோட்டுகள் புழக்கம் முடக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. மேலும் நாட்டில்  கறுப்பு நோட்டை முற்றிலும் முடக்க பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை வெளியிடவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் வெளியாகும்.

அந்த நோட்டுகள் நம் நாட்டு தட்பவெப்ப நிலையிலும் பாதிக்கப்படாதவகையில் தயாரிக்கப்படும். பல சோதனைகளுக்கு பின்னரே பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் லோச்சபாவில் தெரிவித்தார். நாசிக்கில் வெளியான ரூ1000 நோட்டுகளில் பாதுகாப்பு இழைகள் இல்லையே என்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதிலளிக்கையில்  இந்த குறைபாடு சரி செய்யப்படும் என உறுதியளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்