முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வியை போன்று மருத்துவத்திற்கும் முக்கியத்துவம்

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,  தமிழகத்தில் அம்மாவின் அரசு கல்வியைப் போன்று மருத்துவத் துறைக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து  செயல்படுத்தி வருகிறது என்று பெண்களுக்கான மருத்துவ முகாமில் வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பாத்திமா மருத்துவமனையில் ஜெர்மன் மருத்துவர்களுடன் இணைந்து பெண்களுக்கான இலவச மருத்துவ தொடர் முகாம் அடைக்கல அன்னை சபை தலைவர் மரிய பிலோமி தலைமையில் நடைபெற்றது. சபையின் மாநில தலைவி லீமா மேரி முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி ஆசிர் வழங்கினார். மருத்துவ முகாமினை வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகையில்,

பெண்களுக்கு புதுப்புது நோய்கள் உருவாகின்றன. அவற்றை ஞிக்குவதற்கு பல்வேறு மருத்துவ வசதிகள் உள்ளன. அரசு மருத்துவமனையில் தேவையான அனைத்து உபகரணங்களும் உள்ளது. ரூ.4 லட்சம் வரை இலவசமாகவே மருத்துவம் செய்து கொள்ளலாம். மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் ரூ.4 லட்சம் வரை சிகிச்சை செய்வதற்கு அரசு வழிவகுத்துள்ளது. ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை இலவச காப்பீடு திட்டத்தை இன்றைய தேதி வரை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது. கல்விக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறதோ, அதே அளவிற்கு மருத்துவத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

தற்போது பாத்திமா மருத்துவமனையில் ஜெர்மனி டாக்டர்களைக் கொண்டு பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  திண்டுக்கல் மறைமாவட்டத்தில் கிறிஸ்தவ அமைப்பினர் கல்விப்பணியோடு, மருத்துவ பணியையும் சிறப்புற செய்து வருகின்றனர்.

அம்மாவின் அரசு மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இப்பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன என்று பேசினார்.

நிகழ்ச்சியில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் ஸ்வாதி, ஸ்டெப்னி, ஸ்டீபன், ஜெபிளி, ரோஸி, தோஜ்ஸ்டன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இம்மருத்துவ முகாமில் பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள், சின்னப்பை ஞிர் கட்டிகள், வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை இறக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் மருத்துவம் பார்க்கப்படுகிறது. தங்கும் இடம், உணவு, மருந்து ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இவ்விழாவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மருதராஜ், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் மோகன், ஜேசு, சுப்பிரமணி, துளசிராம், முன்னாள் மாமன்ற உறுப்பினர் இக்பால், அ.தி.மு.க. நிர்வாகிகள் சர்புதீன், நைனார் முகமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மருத்துவமனை நிர்வாகிகள் டாக்டர் ஹெலன், ரால்ப் மற்றும் அடைக்கல அன்னை சபை சகோதரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். முன்னதாக சகோதரி ஜென்ன ராக்கினி வரவேற்றார். டாக்டர் ஹெலன், ஆஷா ஆகியோர் வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்