முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தின் திருத்தேர் வெள்ளோட்டம் நாளை நடக்கிறது : செய்தியாளர் பயணத்தில் கலெக்டர் சுபழனிசாமி தகவல்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தின் திருத்தேர் வெள்ளோட்டம் நாளை 2ம் தேதி நடைபெறுவதையொட்டி வேதாரண்யம் நகரில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சுபழனிசாமி, செய்தியாளர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

 

செய்தியாளர் பயணம்

 

இந்த செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தின் மாசிமக உற்சவத்தின் ஒரு பகுதியாக வரும் மார்ச் 9-ம் தேதி ஹம்ஸ நடன பவனி விடங்க தியாகராஜர் எழுந்தருளி திருத்தேரில் அமர்ந்து வீதியுலா வரும் காட்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி சுமார் 60 ஆண்டுகளுக்கு பின் நடைபெறவுள்ளதால் அரசு நிதியுதவி மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் ரூ.50 லட்சம் செலவில் 18 அடி உயரம் மற்றும் அகலத்தில் புதிய மரத்தேர் செய்யப்பட்டுள்ளது.

 

தேர் வெள்ளோட்டம்

 

 

இந்த புதிய தேரின் வெள்ளோட்டம் நாளை 2ம் தேதி நடைபெறுகின்றது. அதனை முன்னிட்டு பிரதான வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தேர் வெள்ளோட்டம் நடைபெறும் போது பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக வேதாரண்யம் தாலுக்காவிற்கு அன்று உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக வேதாரண்யம் கோவில், மேலவீதியில் உள்ள ராஜாஜி பூங்கா, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேதாரண்யத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்து வழித்தடங்களில் போக்குவரத்துநெரிசலைக் குறைப்பதற்காக 4 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வடக்குவீதியில் உள்ள வளைவு மற்றும் சுற்றுச்சுவர் இடித்து அப்புறப் படுத்தப்படவுள்ளது. பக்தர்களின் வசதிக்காக நகரில் குடிநீர் மற்றும் தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்படும்." என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் பயணத்தின் போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, வட்டாட்சியர் இளங்கோவன், நகராட்சி ஆணையர் முகமது இப்ராஹிம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) அ.கதிரவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்