முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி ஈகுவார்பாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      சென்னை
Image Unavailable

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளை ஒட்டி ஈகுவார்பாளையம் பகுதி அதிமுக சார்பில் ஈகுவார்பாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் திங்களன்று நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமிற்கு ஈகுவார்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக நிர்வாகி கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமை தாங்கினார். அதிமுக நிர்வாகிகள் எபினேசர், ஆரோன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மருத்துவ முகாமில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவனையின் உள்ளுறை மருத்துவ அதிகாரி டாக்டர் முரளிதரன் தலைமையில் 7 சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்ட 50 பேர் கொண்ட மருத்து குழுவினர் சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் பொது மருத்துவம், முடநீக்கியல், பெண்களுக்கான சிறப்பு மருத்துவம், தோல் வியாதிகளுக்கு மருத்துவம், கண், காது, மூக்கு போன்ற நோய்களுக்கு மருத்துவம் என பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் ஸ்கேன், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்த மருத்துவ முகாமை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு உள்ளிட்ட அதிமுக-வினர் பார்வையிட்டனர். முகாமில் சுமார் 1000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சுமார் 100 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துமவனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்