முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 2 பேர் கைது நாட்டுத்துப்பாக்கி–வெடி மருந்து பறிமுதல்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      ஈரோடு
Image Unavailable

அந்தியூர் அருகே வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.

ரோந்து

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரகத்துக்கு உள்பட்ட தென்பர்கூர் முதல் ஓடை தடாகம் பகுதியில் வனச்சரகர் முருகேசன், வனவர் தனபால் மற்றும் வன ஊழியர்கள் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது 2 பேர் சாக்கு மூட்டைகள் மற்றும் நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றுடன் சென்று கொண்டிருந்ததை கண்டனர்.வனத்துறையினரை பார்த்ததும் 2 பேரும் மூட்டைகளையும், நாட்டுத்துப்பாக்கியையும் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

கைது

விசாரணையில், ‘ சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள கத்திரிப்பட்டியை சேர்ந்தவர்கள் தம்பி (வயது 55), பழனியப்பன் (65). இவர்கள் 2 பேரும் சென்னம்பட்டி வனப்பகுதியில் 2 நாட்கள் தங்கி இருந்து ஒரு புள்ளிமான் குட்டி, ஒரு கட மான் ஆகியவற்றை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி கொன்றனர். இதில் கட மானை வெட்டி அதன் இறைச்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி காய வைத்து ஒரு சாக்கு மூட்டையில் கட்டி உள்ளனர். மேலும் கொல்லப்பட்ட புள்ளிமான் குட்டியை அப்படியே மற்றொரு சாக்கு மூட்டையில் கட்டி உள்ளனர். பின்னர் 2 மூட்டைகளையும் ஆளுக்கொரு மூட்டையாக  2 பேரும் தூக்கிக்கொண்டு சென்றதும்தெரியவந்தது.இதைத்தொடர்ந்து தம்பி, பழனியப்பன் ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 20 கிலோ இறைச்சி, புள்ளிமான் குட்டி உடல், மான் கால்கள்–4, ஒரு நாட்டுத்துப்பாக்கி, 1½ கிலோ வெடி மருந்து, 2 அரிவாள், ஒரு கத்தி, ஒரு டார்ச்லைட், சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்