முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில், தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் தொடங்கி வைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

      

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமினை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வகுமாரசின்னையன்  முன்னிலையில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.

மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   போலியோ சொட்டு மருந்து வழங்கி செய்தியாளர்களிடம் தெரிவித்ததவாது-

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் சிறப்பு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை இன்றையதினம் துவக்கிவைக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1087 மையங்களும், நகர்புறங்களில் 202 மையங்களும் என 1,289 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஐந்து வயதிற்கு உட்பட்ட 2.00 இலட்சம் குழந்தைகள் பயன் பெறவுள்ளனர். இவர்களில் 10,089 ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மலைப்பகுதியில் உள்ளனர். இவர்களுக்கு 104 மையங்களிலும், 6 நடமாடும் மையங்கள் மூலமாகவும் போலியோ சொட்டு மருந்துகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களிலிருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வசிப்பவர்களின் 751 ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 30 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பேருந்து நிலையம், இரயில் நிலையம், கோவில்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 62 மையங்கள் மற்றும் 23 நடமாடும் மையங்கள் சிறப்பு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாமிற்கு தேவையான போலியோ சொட்டு மருந்துகள் அனைத்து மையங்களுக்கு அனுப்பப்பட்டு முகாமில் வழங்க தயார் நிலையில் உள்ளது.               

போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்களுடன் பிறதுறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 5,234 பணியாளர்கள் பணியாற்றவுள்ளனர். இப்பணிகளுக்கு 97 அரசு துறை வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.            

அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்த விதமான பின்விளைவுகளும் ஏற்படாது.

அனைத்து ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு இருந்தாலும், முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளான இன்றும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளித்து தங்களது குழந்தைகளுக்கு போலியோ வராமல் பாதுகாக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து முகாம் இரண்டாம் தவணையானது வரும் 30.04.2017 அன்று நடைபெறவுள்ளது எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  ஈரோடு வருவாய் கோட்டாட்சியர், நர்மதாதேவி, இணை இயக்குநர் நலப்பணிகள் மரு.த.கனகாசலகுமார், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பெ.பாலுசாமி, உறைவிட மருத்துவ அலுவலர் அரங்கநாயகி, மருத்துவமனை கண்காணிப்பாளர் லட்சுமி, துறை சார்ந்த அலுவலர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago