முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: லசித் மலிங்காவின் பந்து வீச்சை நம்பியிருக்கும் இலங்கை அணி

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இலங்கை அணி மலிங்காவின் மேஜிக் பந்து வீச்சை நம்பியிருக்கிறது.

8 அணிகள்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது. இதில் இடம்பிடித்துள்ள 8 அணிகளில் இலங்கையும் ஒன்று. இலங்கை அணி ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இதே பிரிவில் தென்ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் உள்ளன. இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி சமீப காலமாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

மலிங்கா - மேத்யூஸ்

ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றாலும், இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான தொடரை இழந்திருந்தது. இளம் வீரர்களை கொண்டு சாம்பியன்ஸ் டிராபியில் சாதிக்க முடியாது என்று நினைத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் மலிங்கா மற்றும் காயத்தில் இருந்து மீண்ட மேத்யூஸ் ஆகியோரை இலங்கை அணியில் சேர்த்துள்ளது.

இலங்கை நம்பிக்கை

மலிங்கா கடந்த 18 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டது கிடையாது. தற்போது இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அவர் டி20 ஓவர் போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். இதனால் 10 ஓவர்கள் வீசக்கூடிய அளவிற்கு உடற்தகுதி பெறுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடர் 10 ஓவர்கள் வீசி, தனது மேஜிக் பந்தின் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியை தேடித்தருவார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் நம்புகிறது.
உதவியாக இருக்கும்

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்கா சுமதிபாலா கூறுகையில் ‘‘மலிங்காவின் உடற்தகுதி முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 10 ஓவர்கள் பந்து வீசுவார் என்று நம்புகிறோம்’’ என்றார். மலிங்கா 10 ஓவர்கள் வீசினால் அது இலங்கை அணிக்கு மிகக்பெரிய உதவியாக இருக்கும். மலிங்காவைத் தவிர சுரங்கா லக்மல், நுவான் பிரதீப், நுவான் குலசேகரா, திசாரா பெரேரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து