முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் விவகாரம்: மத்திய நிபுணர் குழு மீண்டும் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

வள்ளியூர், நவ.15 - கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மத்திய நிபுணர் குழுவினர் இன்று 15 ம் தேதி இரண்டாம் கட்ட ஆய்வை மேற்கொள்ளவுள்ளனர். இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில் அணுமின் எதிர்ப்பாளர்களின் போராட்டத்தால் அணுமின் நிலையத்தில் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கருவிகள் பழுதடையும் அபாயம் உள்ளதாக அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய நிபுணர் குழு மீண்டும் கூடங்குளம் அணுமின் உலை பகுதிகளை இன்று ஆய்வு செய்யவுள்ளது. 

கடந்த 8 ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட ஆய்வில் முத்துநாயகம் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர். 2 ம் கட்ட ஆய்வில் குழுவில் இடம்பெற்றுள்ள 15 பேரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வுக்குப் பின்னர் போராட்டக் குழுவினரின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிப்பார்கள் எனத் தெரிகிறது. மத்திய நிபுணர் குழுவின் ஆய்வுக்குப் பின்னர் போராட்டக் குழு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள 21 பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வுப் பணிகளை தொடங்கவிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்