முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை வேவு பார்க்கும் பாகிஸ்தானின் 46 முயற்சிகள் முறியடிப்பு

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நவ. - 24 - பாதுகாப்பு துறையில் 8,550 பேர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.  மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த அவர், மிக அதிகபட்சமாக எல்லை பாதுகாப்பு படை பிரிவில் 4,852 பேரும், சி.ஆர்.பி.எப். பிரிவில் 2,128 பேரும் விருப்ப ஓய்வில் சென்றிருப்பதாக தெரிவித்தார். கடந்த 2008 ம் ஆண்டு முதல் இந்தியாவை வேவு பார்க்க பாகிஸ்தான் மேற்கொண்ட 46 முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இந்திய உளவுத் துறையை வலுப்படுத்த மத்திய, மாநில அரசுகளிடையே தகவல் பரிமாற்ற ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் எஸ்ஸார் நிறுவனம் சார்பில் நக்சல்களுக்கு பணம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.  ஜவஹர்லால் நேரு தேசிய ஊரக புனரமைப்பு திட்டத்தில் 28 நகரங்களை சேர்க்க திட்டக் கமிஷன் மறுத்து விட்டது என்று மத்திய ஊரக மேம்பாட்டுதுறை இணை அமைச்சர் சவுகதாராய் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். நிதி ஆதாரத்தை காரணம் காட்டி திருச்சி, சேலம், திருப்பூர், கோழிக்கோடு உள்ளிட்ட நகரங்களை திட்டத்தில் சேர்க்க திட்ட கமிஷன் மறுத்து விட்டது என்றும் அவர் விளக்கமளித்தார்.  தேசிய தலைநகர் பிராந்திய திட்டத்தில் டெல்லியுடன் அதன் அண்டை மாநிலங்களான அரியானா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தானை இணைக்க 8 புதிய ரயில்வே வழித்தடங்களை அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று இணையமைச்சர் சவ்கதா ராய் தெரிவித்தார். டெல்லியில் இருந்து குர்கான், ரேவர் வழியாக ராஜஸ்தானின் ஆல்வார் வவை 168 கி.மீ. தூரத்திற்கு ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல் மீரட், பானிபட், சோனிபட் உள்ளிட்ட நகரங்களும் டெல்லியுடன் இணைக்கப்படும் என்று அவர் கூறினார்.  டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் புதிதாக 70 ஆயிரம் வீடுகள் கட்டப்படவுள்ளன. இதன்படி துவாரகா, ரோகினி உள்ளிட்ட பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன என்று மற்றொரு கேள்விக்கு சவ்கதாராய் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்