முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவிற்கான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நாளை நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      தூத்துக்குடி

 திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடக்கவுள்ள கந்த சஷ்டி திருவிழாவிற்கான அதிகாரிகள் லோசனைக்கூட்டம் நாளை நடக்கிறது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடக்கும் பல்வேறு திருவிழாக்களில் மிக முக்கியமானது கந்த சஷ்டி திருவிழாவாகும். இவ்வாண்டு இந்த திருவிழா வரும் அக். 20ம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது. அக். 25ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. இவ்விழாவில் 10 லட்சம் பக்தர்களுக்கு மேல் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து திருக்கோவில் இணை ஆணையர் செய்தி குறிப்பில் தெறிவித்துள்ளதாவது: மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கந்த சஷ்டி திருவிழாவிற்கு வருகின்ற பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நாளை 5ம் தேதி முற்பகல் 11 மணி அளவில் இத்திருக்கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைத்து நடக்கிறது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இக்கூட்டத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் குறித்து ஆலோசனைகளை பொதுமக்களும் வழங்கலாம் என செய்தி குறிப்பில் இணை ஆணையர் பாரதி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து