முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த ஊழலிலும் என் மகன் ஜெய்ஷா ஈடுபடவில்லை: அமித்ஷா விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 15 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : என மகன் ஜெய்ஷா அரசாங்கத்திடம் எந்த ஒப்பந்தமும், நிலமும் பெறவில்லை என்று பா.ஜ.க  தேசிய தலைவர் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

"எனது மகனின் நிறுவனம் அரசாங்கத்திடம் எந்த ஒப்பந்தமும், நிலமும் பெற்றுக் கொள்ளவில்லை. என் மகன் தொழில் சார்ந்து எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை.  - பா.ஜ.க. தலைவர் அமித்ஷா

இதுகுறித்து அமித் ஷா  கூறியபோது, "எனது மகனின் நிறுவனம் அரசாங்கத்திடம் எந்த ஒப்பந்தமும், நிலமும் பெற்றுக் கொள்ளவில்லை. என் மகன் தொழில் சார்ந்து எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எனது மகன் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான முடிவை நீதிமன்றம் எடுக்கும்” என்றார்.

பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவின் தொழில் அபரிமிதமான வளர்ச்சி பெற்றிருப்பதாக ‘தி வையர்’ என்ற செய்தி இணையதளம் கட்டுரை வெளியிட்டிருந்தது. இதை மறுத்த ஜெய்ஷா, ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு அந்த இணையதளத்துக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் ஜெய்ஷாவுக்கு ஆதரவாக கருத்து கூறினர். இந்த விவகாரம் தொடர்பாக நீண்ட நாள் மவுனம் காத்து வந்த அமித் ஷா தற்போது கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தகக்து.


இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து