முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை வக்புவாரிய கல்லூரியில் மாணவ,மாணவிகள் ரத்ததானம்

செவ்வாய்க்கிழமை, 17 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை, -     டெங்கு பாதித்த நோயாளிகளுக்கு உதவும் பொருட்டு மதுரை வக்புவாரிய கல்லூரியில் மாணவ,மாணவிகள் ரத்ததானம் வழங்கினர்.
      டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவும் பொருட்டு மதுரை வக்புவாரிய கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை இணைந்து கல்லூரியில் ரத்ததானம் முகாம் நடத்தினர்.  வக்புவாரிய கல்லூரி முதல்வர் எம்.அப்துல்காதிர், ஆட்சி மன்றகுழு உறுப்பினர்கள் நைனார் முகமது, ஹெச்.எம்.டி.கான் ஆகியோர் ரத்ததான முகாமை தொடங்கி வைத்தனர். இதில் சுயநிதி பிரிவு இயக்குனர் கே. சமீம்ராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
     அரசு ராஜாஜி மருத்துவமனை டாக்டர் அறிவரசன் தலைமையில் மருத்துவ குழுவினரும், மாணவ, மாணவிகள் அளித்த ரத்தத்தை சேகரித்தனர். இந்த முகாமில் 60 - க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது ரத்தத்தை தானமாக வழங்கினர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை வக்புவாரிய கல்லூரியின் நாட்டு நலப்பணி அலுவலர்கள் உசேன் சையது இப்ராஹிம், எம்.தவ்லத்பேகம் மற்றும் கே.எம்.ரியாஸ், டி.எம்.எஸ்.மைதீன் ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து