முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலங்காநல்லூரில் கந்து வட்டி விழிப்புணர்வு பேரணி

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      மதுரை
Image Unavailable

வாடிப்பட்டி,-  மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மாவட்ட காவல்துறை சார்பில் கந்துவட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அந்தந்த போலிஸ் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன்படி அலங்காநல்லூரில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இப்பேரணியில்
கொடுக்காதே கொடுக்காதே கந்துவட்டிக்கு பணம் கொடுக்காதே,
வட்டிக்கு கொடுத்து வசதியாய் இருப்பவரே சிறைவாசல் காத்திருக்கு,
வாங்காதே வாங்காதே கந்துவட்டிக்கு வாங்காதே
கந்துவட்டிக்கு வாங்கி குடியை கொடுக்காதே
கொடுங்கள் கொடுங்கள் கந்துவட்டி கொடுப்போர் மீது புகார் கொடுங்கள்
கந்துவட்டி வட்டி கொடுப்போருக்கு 3 வருடம் சிறைவாசம் முப்பதாயிரம் அபராதம் காத்திருக்கு என்ற கோசங்கள் அடங்கிய பதாகைகளுடன் அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பேரணியில் கலங்து கொண்டனர். அலங்காநல்லூர் முக்கிய வீதிகளில் பேரணியாக வந்து பஸ்நிலையத்தில் பேரணியை நிறைவு செய்தனர்.
இதில் சார்பு ஆய்வாளர் அசோகன், தலைமை காவலர் போஸ், காவலர்கள் ஜெயப்பிரகாஷ், பாண்டிசெல்வம், துணைத்தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து