முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச சைக்கிள் வழங்கும்விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

கோவை, டிச.- 11 - தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கிய நலத்திட்டங்களை பயன்படுத்தி மாணவர்கள் சாதிக்க வேண்டும் என  வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச சைக்கிள் மற்றும், சிறப்பு உதவித்தொகை வழங்கும் விழா, வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. விழாவில், மாவட்ட கலெக்டர் கருணாகரன் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி, தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: 2001-06ம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதிதிராவிட மாணவர்களுக்கு மட்டும் வழங்கி வந்த இலவச சைக்கிள்கள், பின்பு, அனைத்து மாணவர்களுக்கும் என மாற்றி, அனைத்து மாணவர்களுக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு பெரும்பாலும் படிப்பிலேயே கவனம் இருக்கும். உடல் ஆரோக்கியம் என்பதில் கவனம் செலுத்த தவறி விடுவர். மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால், மாணவர்ளுக்கு இலவச சைக்கிள் மட்டும் இல்லாமல், ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது, ஏழை மாணவர்கள் கல்வி கற்க உதவும். கல்வி உதவித்தொகை, சைக்கிள் வழங்குதல் என கோவை மாவட்ட கலெக்டர் பல்வேறு இடங்களில் இதற்கான ஏற்பாட்டை செய்து வருகிறார். மாணவர்களுக்கு இவ்வாறான திட்டங்களை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளார். இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதன்மூலம் மாணர்கள் தங்களுக்கு படிக்கும் பள்ளிக்கும், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.  விழாவில் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாசலம், துணை தலைவர் கலாமணி, மண்டல தலைவர் பெருமாள்சாமி, பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்