முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நுட்ப கோளாறு:பிருத்வி ஏவுகணை சோதனை ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

பல்சூர், டிச. - 22 - ஏவுதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக நேற்று நடக்கவிருந்த பிருத்வி -2 ஏவுகணையின் இரட்டை சோதனை ஒத்தி வைக்கப்பட்டது.  ஒரிசா மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள சண்டிப்பூர் பாதுகாப்பு தளத்தில் இருந்து நேற்று பிருத்வி - 2 ஏவுகணை இரட்டை பரிசோதனை செய்யப்படவிருந்தது. ஆனால் ஏவுதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக நேற்று 2 ஏவுகணைகள் பரிசோதிப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சண்டிப்பூர் பாதுகாப்பு தள தலைவர் எஸ்.பி. தாஷ் கூறியதாவது, ஏவுதளத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பரிசோதனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கோளாறை சரி செய்த பிறகுதான் அடுத்த பரிசோதனை தேதி அறிவிக்கப்படும். இரட்டை பரிசோதனையின் போது இரண்டு ஏவுகணைகள் செயலிழந்தன என்று ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. எந்த அடிப்படையில் சோதனை தோல்வியடைந்தது என்று கூறினார்கள் என்பதே தெரியவில்லை என்றார். தரையில் இருந்து தரையை தாக்கும் இரண்டு பிருத்வி 2 ஏவுகணைகள் நேற்று பரிசோதிக்கப்படுவதாக இருந்தது. 9 மீட்டர் நீளம் கொண்ட அது சுமார் 500 கிலோ எடை கொண்ட ஆயுதங்களை தாங்கி செல்லும் தன்மை உடையது. கடந்த செப்டம்பர் மாதம் சண்டிப்பூர் தளத்தில் இருந்து பிருத்வி 2 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்