முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் முழு கொள்ளளவை எட்டுகிறது வைகை அணை 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

ஆண்டிப்பட்டி,ஆக.வைகை அணை 67 அடியை எட்டியுள்ளதால் மதுரை உள்பட 5 மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை நேற்று  விடப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் இரண்டொரு நாளில் முழு கொள்ளளவை வைகை அணை எட்டி விடும்.

3-வது நாளாக 142 அடி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 8 கி.மீ தூரத்தில் வைகை அணை உள்ளது. இந்த அணை மூலம் ஆண்டிப்பட்டி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டத்தில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதியும், குடிநீர் வசதியும் பெறுகிறது.

72 அடி உயரம் கொண்ட இந்த அணைக்கு வருசநாடு, மேகமலை, மூலவைகையாறு வழியாகவும், பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் நிரம்புகிறது.

கடந்த சில நாட்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. நேற்று 3-வது நாளாக 142 அடி நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பெரியாறு அணைக்கு வரலாற்றில் முதல்முறையாக 25,733 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் தமிழகபகுதிக்கும், 23,000 கனஅடிநீர் இடுக்கி அணைக்கும் வெளியேற்றப்படுகிறது. தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணை நீர்மட்டம் 67 அடியை எட்டியுள்ளது.

வழக்கமாக 67 அடியை தொட்டதும் முதற்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கையும், 69 அடி எட்டியதும் 2-வது கட்ட எச்சரிக்கையும், 70-அடி வந்ததும் 3-வது வெள்ளஅபாய எச்சரிக்கையும் விடப்படும். நேற்று காலை 67 அடியை தாண்டியுள்ளதால் முதற்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இன்னும் இரண்டொரு நாளில் வைகை அணை முழுகொள்ளளவை எட்டிவிடும். எனவே மதுரை உள்ள 5 மாவட்டங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து