முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை விவகாரம்: அவசரகதியில் எடுக்கும் முடிவால் பொருளாதாரம் பாதிக்கப்படும் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. விலையை கட்டுப்படுத்த அவசரகதியில் எடுக்கும் எந்த நடவடிக்கையும் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கட்சிகள் வலியுறுத்தல்

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 14 காசுகள் உயர்ந்து, 84 ரூபாய் 19 காசுகளுக்கு விற்கப்பனையானது. இதேபோல, டீசல் விலை 12 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 25 காசுகளுக்கு விற்கப்பனையானது. இந்த மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை 2 ரூபாய் 42 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 83 காசுகளும் உயர்ந்துள்ளது. தொடரும் விலைஉயர்வைக் கட்டுப்படுத்த கலால் வரியை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

தற்காலிக தீர்வால்...

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பெட்ரோலிய விலை விவகாரத்தில் தற்காலிக தீர்வை ஏற்படுத்தாமல், நிரந்தர தீர்வுக்கான வழிவகைகளை மத்திய அரசு ஆய்வுசெய்து வருவதாக தெரிவித்தார். மேலும், அவசர கதியில் எடுக்கப்படும் தற்காலிக நடவடிக்கைகள், பணவீக்கத்தை அதிகரிப்பதுடன், நிதிப் பற்றாக்குறையையும் அதிகரித்து பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பியூஷ் கோயல் கூறினார்.

உற்பத்தி அதிகரிக்கும்

இதனிடையே, கரும்புச்சாறிலிருந்து எடுக்கப்பட்டு பெட்ரோல் உற்பத்திக்கு உதவும் எத்தனாலின் விலையை 47 ரூபாய் 13 காசுகளிலிருந்து 59 ரூபாய் 13 காசுகளாக அதிகரிக்க பொருளாதார விவகாரங்களுக்கான  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் எத்தனால் விலை அதிகரிப்பால், கரும்பு உற்பத்தியாளர்கள் எத்தனால் உற்பத்தியை அதிகரிப்பார்கள். இதன் மூலம் பெட்ரோல் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் பெட்ரோலிய இறக்குமதி குறையும் என்றும் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து