முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் ரீதியாகதயாராக இருக்கிறேன்: அடுத்த டெஸ்ட் தொடர்ல ஓய்வு கொடுத்திடாதீங்க: ஆண்டர்சன்

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : அடுத்து நடக்கும் டெஸ்ட் தொடரில் எனக்கு ஓய்வு கொடுத்துவிட வேண்டாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

அதிக விக்கெட்டுகள்...

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் இலங்கையின் முரளிதரன் (800 விக்கெட்), ஆஸ்திரேலி யாவின் வார்னே (708 விக்கெட்), இந்தியாவின் கும்பிளே (619 விக்கெட்) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். இவர்கள்  சுழற்பந்து வீச்சா ளர்கள். ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் 563 விக்கெட்டுகளுடன் இந்த வரிசையில் 4வது இடத்தில் இருந்தார்.

முதலிடத்தைப் பிடித்தார்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் முகமது ஷமியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் 36 வயதான ஆண்டர்சன். 143 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.

ஓய்வு அளிக்கப்படும்?

இந்நிலையில் இங்கிலாந்து அணி, அடுத்து இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடர்களில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ஆண்டர்சன், பிராட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்ப டுகிறது.

ஓய்வு தேவைப்படாது

இந்நிலையில் ஆண்டர்சன் கூறும்போது, ’நானும் பிராடும் குறுகிய ஓவர் போட்டிகளில் பங்கேற்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கிறோம். அதனால் அடுத்த டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க அதிக ஓய்வு தேவைப்படாது. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தயாரா கவே இருக்கிறோம். இலங்கை தொடருக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கிறது. போதுமான ஓய்வு இருக்கிறது என்பதால் ரெஸ்ட் கொடுத்து விட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

சிந்திக்கவில்லை

அந்த தொடரிலும் சிறப்பாக விளையாடுவோம். ஓய்வு பெறுவது பற்றி கேட்கிறார்கள். நான் அதுபற்றி சிந்திக்கவில்லை. அடுத்த போட்டி, அடுத்த தொடர் என என பயணம் சென்றுகொண்டே இருக்கிறது. அதையே நான் விரும்புகிறேன். இளம் வீரர் சாம் கர்ரன் பற்றி கேட்கிறார்கள். அவர் இங்கிலாந்து அனிக்கு கிடைத்துள்ள வைரம்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து