முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் மணல் திருடிய பஞ். தலைவர்கள் கைது தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி அதிரடி

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ,உத்தரபிரதேச மாநிலம் கிழக்கு பகுதியில் இருக்கும் பின்தங்கிய மாவட்டம் சோன்பத்ரா. நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியான இது, பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது.

இந்த மாவட்டத்தில் இணை ஆட்சியராக இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிகண்டன் பணியாற்றி வருகிறார். தமிழகத்தின் நெய்வேலியைச் சேர்ந்தவரான இவர், 2017-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். பணியில் இணைந்த 4 மாதங்களில் அவர் சோன்பத்ராவில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.கடந்த மாதம் நடந்த முஹரம் பண்டிகையின்போது, முஸ்லிம்களை போல் இந்துக்களும் ஷாகன்ச் பகுதியில் ஒரு தேரை இழுத்து ஊர்வலம் நடத்தினர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் சூழல் உருவானது. ஆனால், இந்த விவகாரத்தில் மணிகண்டன் தலையிட்டு இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார்.அதேபோல், சோன்பத்ராவின் சோன் எனும் ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமாக மஞ்சள் மணல் திருடுபவர்கள், தங்களின் அரசியல் பின்புலம் காரணமாக எவ்வித நடவடிக்கைக்கும் உள்ளாவதில்லை. இதுதொடர்பான புகார்களை பெற்ற மணிகண்டன், அங்கு நேரடியாக சென்று மணல் திருடியதாக 4 பஞ்சாயத்து தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்தார். அவர்களில் மூன்று பேர் பா.ஜ.க, ஒருவர் சமாஜ்வாடியை சேர்ந்தவர்கள்.

இவர்கள் மீதான நடவடிக்கையை முடக்க வேண்டி, ஆளும் பா.ஜ.க.வினர் கொடுத்து வந்த நெருக்கடிகளையும் மீறி, அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதனிடையே, கடந்த மாதம் சோன்பத்ராவில் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு இளம் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர், அங்கு கோரேவால் பஜாரில் எல்.ஜே. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது சிகிச்சை மறுக்கப்பட் டது. பின்னர், அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அப்பெண் உயிரிழந்தார்.இதுதொடர்பான விசாரணைக்காக எல்.ஜே. மருத்துவமனைக்கு மணிகண்டன் நேரில் சென்றுள்ளார். அதன் மருத்துவரான மோகனின் சான்றிதழ்களை சோதித்த போது, அவர் வெறும் பி.ஏ பட்டதாரி என்பது தெரியவந்தது. மேலும், அதன் மருந்து கடைக்கும் உரிய உரிமங்கள் இல்லை. இதனைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனை மற்றும் மருந்துக் கடைக்கு மணிகண்டன் சீல் வைத்தார். இதனால் தமிழக அதிகாரி மணிகண்டனுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து