முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தட்டான்கள் இருக்கும் இடத்தில் கொசு இருக்காது ஏன் தெரியுமா?

டிராகன்ஃபிளைஸ்(Dragonflies) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தட்டான், தட்டாரப்பூச்சி எனவும், தும்பி எனவும், தட்டாம்பூச்சி எனவும் அழைப்பார்கள். தட்டான் பூச்சிகள் மிக வேகமாக லாவகமாக பறக்கின்றன. மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் விரைவாக பறக்க கூடியவை. இவை ஒரு ஆண்டில் 14 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கக் கூடியது. ஏறத்தாழ 6000 வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் இதுவரை 503 தட்டான் இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தட்டான் பூச்சிகள் ஏறத்தாழ 325 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வரும் ஒரு உயிரினம். டினோசர்களை விட மிகவும் பழமையானவை. தட்டான்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றன. அவைகள் சூடான காலநிலை மற்றும் தண்ணீருக்கு அருகில் வாழ விரும்புகின்றன. தட்டான் பூச்சிகள் கொசுக்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றன. தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் தொல்லை குறைவாக இருக்கும்.

ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் சாதனை

1984 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஜெர்மனி வீரர் Uwe Hohn என்பவர் தான் அதிகபட்ச தூரத்துக்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ளார். அவர் எறிந்த தூரம் எவ்வளவு தெரியுமா 104.80 மீட்டர். அதற்கு முந்தைய சாதனை அமெரிக்காவைச் சேர்ந்த டாம் பெட்ரானோவ் ஈட்டி எறிந்த தூரம் 99.72. ஈட்டி எறிதலில் இதுவரை Uwe Hohn சாதனைக்கு அருகில் கூட செல்ல முடியவில்லை.

தண்டவாளத்தில் சரளைக்கற்கள் போடப்படுவது ஏன் தெரியுமா?

அதிக எடை கொண்ட ரயிலைத் தண்டவாளங்கள் தாங்குகின்றன. அவற்றை, அடிக்கட்டைகள் தாங்குகின்றன. முன்பெல்லாம் மரத்தால் ஆன அடிக்கட்டைகள் பயன்படுத்தப் பட்டன. தற்போது கான்கிரீட்டால் செய்யப்பட்ட அடிக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. தண்டவாளத்தின் மேல் ரயில் செல்லும்போது நிலைப்புத்தன்மையை உண்டாக்குவதற்காக, சரளைக் கற்களை நிரப்பி வைக்கிறார்கள். உருண்டையான அல்லது வழவழப்பான கற்கள் என்றால், ரயிலின் வேகத்தால் ஏற்படும் அதிர்வில் உருண்டு ஓடிவிடும். மாறாக கூர்மையான விளிம்புகளுடைய சரளைக் கற்கள், ஒன்றோடு ஒன்று நெருக்கமாகப் பிணைத்துக்கொள்கின்றன. இதனால் நிலைப்புத்தன்மை நன்றாகக் கிடைக்கிறது. ரயில் செல்லும்போது சரளைக் கற்களும் உருண்டு ஓடுவதில்லை. சரளைக் கற்களுக்கு மேல் சற்று உயரமாகத் தண்டவாளம் அமைக்கப்படுவதால், மண் மூடும் வாய்ப்பும் இல்லை. மழையால் தண்ணீரும் தேங்குவதில்லை. செடி, கொடிகளும் முளைப்பதில்லை. அதனால்தான் தண்டவாளத்தில் சரளைக் கற்களைப் போடப்படுகின்றன.

புதியவகை ஸ்பாஞ்ச்

கடலில் எண்ணெய்க் கசிவை உறிஞ்சும் புதிய வகை ஸ்பாஞ்சை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஓலியோ எனப்படும் இந்த ஸ்பாஞ்சானது இயற்கை பேரிடர் , எண்ணெய் டேங்கர்கள் வெடித்துச் சிதறும்போது ஏற்படும் கசிவை உறிஞ்ச பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதிவேக லைபை

வைபை இணைப்புக்களுக்கு பதிலாக ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணைய இணைப்பினை உருவாக்கப்படுவதே லைபை.இத்தொழில் நுட்பமானது வைபையைப் போல பன்மடங்கு வேகத்தினைக் கொண்டதாக இருக்கிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள இணைப்புகளை விட 100 மடங்கு வேகமாக இருக்குமாம். லைபை தொழில்நுட்பத்தில் எல்.இ.டி மின்விளக்குகளே பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த லைபை வசதியின் மூலம் 40 Gbps வேகத்தில் தரவுப்பரிமாற்றம் மேற்கொள்ளமுடியும். அகச்சிவப்பு கதிர்களை பயன்படுத்தி இந்தப் புதிய லைபை உருவாக்கப்பட்டுள்ளது. வீடுகள், அலுவலகங்களில் லைபை சாத்தியம் என்று கூறப்படுகிறது. பரிசோதனை முயற்சியில் இருக்கும் இத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால் இணைய உலகில் திருப்புமுனையாக இருக்கும் .

கருப்பு ஆடைகளை மெருகூட்ட காபி

இதென்ன புதுக்கதையாக இருக்கிறது என்று ஆச்சரியப்பட வேண்டாம்... கருப்பு நிற ஆடைகள், அடர் நிற ஆடைகள் நிறம் மங்கி விட்டதா.. கவலை வேண்டாம். இரு கோப்பை காபி போதும்.. காஃபி மேக்கரில் நன்றாக தயார் செய்யப்பட்ட 2 கோப்பை காஃபி டிகாக் ஷனை எடுத்து கொள்ளுங்கள்...வாஷிங் மெஷினில் வெளுத்து பல்லிளிக்கும் அடர் மற்றும் கருப்பு நிற துணிகளை போடுங்கள்.. கூடவே காபி டிகாக் ஷனை சேருங்கள்... அலசும் ஆப்ஷனை ஆன் செய்யுங்கள்... அவ்வளவுதான் வாஷிங் மெஷின் நின்றதும் எடுத்து துணிகளை காயப் போடுங்கள்..புத்தம் புதுசாக இருக்கும்...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 days ago