முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.வி.எஸ் மோட்டார் நிகர லாபம் உயர்வு

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 16 சதவீதம் உயர்ந்து 154 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.132 கோடியாக நிகர லாபம் இருந்தது. இந்த காலாண்டில் வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.3,239 கோடியாக இருந்த வருமானம் தற்போது ரூ.3,684 கோடியாக இருக்கிறது.

இந்த காலாண்டில் இரு சக்கர வாகன விற்பனை 13.8% (ஏற்றுமதியும் சேர்த்து) உயர்ந்து 7.99 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் 7.03 லட்சம் விற்பனையானது. மூன்று சக்கர வாகன விற்பனை 67 சதவீதம் உயர்ந்து 26,968 ஆக இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து