முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: கண்ணீர் மல்க மன்னிப்பு கோரிய ஸ்டீவன் சுமித் !

வியாழக்கிழமை, 29 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.

ஆஸி. தோல்வி...

தென்னாப்பிரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.  இந்த நிலையில், கேப்டவுனில் சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஓராண்டு தடை...

இந்த போட்டியின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட், சொரசொரப்பான மஞ்சள் நிற காகிதத்தை வைத்து பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னணியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுமித் மற்றும் வார்னர் ஆகியோர் ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.  இருவரும் இந்த வருட ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடை விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு பெருத்த தலைகுனிவை இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.

கண்ணீர் மல்க...

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய தலைமையில் முதல்முறையாக பந்தை சேதப்படுத்தும் சம்பவம் நடந்துள்ளது. எங்கள் மீது கோபமும், வேதனையும் அடைந்துள்ள அனைத்து ரசிகர்கள், சக வீரர்கள், முன்னாள் வீரர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள், நான் மிகவும் கடுமையாக மனவேதனை அடைந்துள்ளது. அதனை நடக்கவிட்டிருக்க கூடாது. யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை. அதற்கு நான் முழு பொறுப்பேற்கிறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மிகப்பெரிய தவறு...

நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். அதனுடைய பின்விளைவுகள் எனக்கு தெரிகிறது. இது எனது தலைமையில் தோல்விதான். நான் கிரிக்கெட்டை அளவுக்கு அதிகமாக விரும்புகிறேன். ஆஸ்திரேலியாவிற்கு நான் அளித்த வலிக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் செய்த தவறுகளை சரி செய்யவும், என் மீதான மரியாதையை மீட்டெடுக்கவும் தேவையான அனைத்தையும் செய்வேன்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து