முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: டொமினிக் தீயம் - முகுருஜா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சனிக்கிழமை, 2 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

பாரீஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் டொமினிக் தீயம் 6-3, 6-7 (5-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பெர்டினியை வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல் முகருஜா 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பெர்டினியை ...

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 7-ம் நிலை வீரரான டொமினிக் தீயம் (ஆஸ்திரியா) 3-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பெர்டினியை எதிர்கொண்டார். இதில் தீயம் 6-3, 6-7 (5-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அதில் அவர் நிஹி கோரியை சந்திக்கிறார்.

பஸ்டா தோல்வி

மற்ற ஆட்டங்களில் உலகின் இரண்டாம் நிலை வீரரான அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), ஜோகோவிச் (செர்பியா), நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். 10-ம் நிலை வீரரான பஸ்டா 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

கரோலின் தகுதி...

பெண்கள் பிரிவில் இரண்டாம் நிலை வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), மேடிசன் (அமெரிக்கா) வெற்றி பெற்றனர். 4-ம் நிலை வீராங்கனை சுவிட்டோலினா (உக்ரைன்) 3-வது ரவுண்டில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

முதல் செட்டை...

நேற்றைய மகளிர் பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் மற்றும் ஸ்பெயின் நாட்டின் கார்பைன் முகுருஜா ஆகியோர் விளையாடினர். கடந்த 2016ம் ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் மற்றும் உலக தர வரிசையில் முதல் இடத்தில் இருந்த செரீனா வில்லியம்சை வீழ்த்தி பட்டம் வென்றவரான முகுருஜா, முதல் செட்டை 6க்கு பூஜ்யம் என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார்.

4-வது சுற்றுக்கு...

தொடர்ந்து 2வது செட்டிலும் தொடக்கத்தில் 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முகுருஜா முன்னிலை பெற்றார்.  ஸ்டோசர் 2-2 என அதனை சமன்படுத்தினார். ஆனால் அடுத்தடுத்த புள்ளிகளை கைப்பற்றி 6-2 என்ற கணக்கில் 2வது செட்டையும் தன்வசப்படுத்தி ஸ்டோசருக்கு அதிர்ச்சியளித்த முகுருஜா 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டிசூரென்கோவுடன்...

இந்த போட்டியில் பெற்ற வெற்றி பற்றி முகுருஜா கூறும்பொழுது, கிராண்ட் ஸ்லாம் சாம்பியனான ஸ்டோசர் கடும் போட்டியாளராக விளையாடினார்.  எனது சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை எனில் வெற்றி பெறுவது கடினம் என எனக்கு தெரியும் என கூறியுள்ளார். அடுத்து  அவர் உக்ரைன் நாட்டின் லெசியா டிசூரென்கோவுடன் 4வது சுற்றில் விளையாட உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து