உலகின் 3-வது பெரும் பணக்காரராக உருவெடுத்த பேஸ்புக் நிறுவனர் மார்க்

சனிக்கிழமை, 7 ஜூலை 2018      உலகம்
mark 2018 07 07

வாஷிங்டன்: உலகின் மிகப் பெரிய 3-வது பெரும் பணக்காரராக உருவெடுத்துள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்.

பேஸ்புக்கின் இணை நிறுவனர் மார்க். உலக அளவில் 3-வது மிகப் பெரிய பணக்காரர் என்ற நிலையை அவர் எட்டியுள்ளார். அமேசான் நிறுவன அதிபர் ஜெப் பெஸாஸ் தொடர்ந்து போர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். இவரது சொத்து, இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 7 லட்சத்து 70 ஆயிரம் கோடி ஆகும்.

மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் 2-வது இடத்தில் நீடிக்கிறார். இவரது சொத்து மதிப்பு 6 லட்சத்து 18 ஆயிரம் கோடி ஆகும். 3-வது இடத்தை பிடித்துள்ள மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ரூ. 5.61 லட்சம் கோடியாகும்.
பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்ததால் மார்க்கின் சொத்து மதிப்பும் வெகு வேகமாக உயர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து