முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.

உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட பொமரேனியன் வகையை சேர்ந்த நாய். அமெரிக்காவை சேர்ந்த இந்த நாய் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தது.

இந்த பூ-வின் பெயரில் பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் போன்றவற்றில் தொடங்கப்பட்ட பக்கங்களை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள். இந்த சமூக வலைத்தள பக்கங்களில் பூ- வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தினசரி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு அந்த நாய் இறந்தது. 12 வயதான பூ தூங்கிக் கொண்டிருந்த போது இதயம் வெடித்து உயிரிழந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். பூ- வின் நெருங்கிய நண்பனாக விளங்கி வந்த புட்டி என்கிற நாய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து