முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா புதிய முதல்வராக பிரமோத் பதவியேற்றார்

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

பனாஜி, மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்டார்  

முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல் மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால்  காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இதையடுத்து, கோவாவில் உள்ள மனோகர் பாரிக்கர் வீட்டில் பிரதமர் மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து, அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதற்கிடையே, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தலைமையில் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்காக கூட்டம்  நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் நேற்று  அதிகாலை 2 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து