முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக்ஜாம் புயல் எதிரொலி: 4, 6-ம் தேதிகளில் நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வு ஒத்திவைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      தமிழகம்
TNPSC 2022 12 20

Source: provided

சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக இன்று 4-ம் தேதி மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

தமிழக அரசு, மிக்ஜாம் புயல் காரணமாக இன்று (04.12.2023) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு, பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளதை தொடர்ந்து நேர்முகத்தேர்வு நாளில் கீழ்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு வரும் 6-ம் தேதி புதன் கிழமைக்கும், வரும் 6-ம் தேதி அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு வரும் வியாழக்கிழமை (07.12.2023) அன்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

எனவே இன்று நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வரும் புதன் கிழமை (06.12.2023). அன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள நேர்முகத்தேர்விலும். புதன் கிழமை (06.12.2023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வியாழக்கிழமை (07.12.2023) அன்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ள நாளில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து