முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு 19 பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்வு

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      இந்தியா
Chhattisgarh-Assembly 2023-

Source: provided

ராய்பூர் : நடந்து முடிந்த தேர்தல் வாயிலாக மொத்தம் 90 உறுப்பினர்கள் உடைய சத்தீஸ்கர் சட்டசபைக்கு, 19 பெண்கள் எம்.எல்.ஏ.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் சட்டசபையின் காலம் முடிவடைவதை அடுத்து, அங்குள்ள 90 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் முடிவுகள் கடந்த 3-ம் தேதி வெளியாகின. இதில் ஆளும் காங்கிரசை வீழ்த்திய பா.ஜ., 54 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. காங்கிரஸ் 35 இடங்களிலும், கோண்ட்வானா கன்தந்திரா கட்சி ஒரு இடத்திலும் வென்றன. 

நடந்து முடிந்த இந்த தேர்தலில், மொத்தம் 90 உறுப்பினர்கள் உடைய சத்தீஸ்கர் சட்டசபைக்கு, 16 பெண்கள் எம்.எல்.ஏ.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் காங்கிரசை சேர்ந்தவர்கள் 11 பேர். பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள் எட்டு பேர். கடந்த 2018 தேர்தலில் காங்கிரசைச் சேர்ந்த 10 பெண்களும், பா.ஜ., பகுஜன் சமாஜ் மற்றும் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சியில் இருந்த தலா ஒரு பெண் என, 13 பேர் தேர்வாகினர். பின் நடந்த இடைத்தேர்தலில் மேலும் மூன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்வாகினர்.

கடந்த சட்டசபையில் 16 பெண்கள் இருந்த நிலையில், இந்த முறை மேலும் மூன்று பேர் அதிகரித்துள்ளனர். இதில், பா.ஜ.,வில் மத்திய அமைச்சர் ரேணுகா சிங், அக்கட்சி எம்.பி., கோம்தி சாய், முன்னாள் அமைச்சர் லதா உசேண்டி உள்ளிட்டோர் அடங்குவர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனிலா பேந்தியா, உத்தரி கன்பத் ஜங்டே, சங்கீதா சின்ஹா, யசோதா நிலாம்பர் வர்மா, சாவித்ரி மனோஜ் மாண்டவி உள்ளிட்டோர் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து