முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் பலி எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      உலகம்
Gaza 2023-11-13

Source: provided

காசா : இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை போரில் சுமார் 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7-ம் தேதி போர் வெடித்தது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்த தற்காலிக போர் நிறுத்தம் கடந்த 1-ம் தேதி முடிவுக்கு வந்தது. இதையடுத்து காசாவை இஸ்ரேல் மீண்டும் முழு வேகத்துடன் தாக்கத் தொடங்கியது. இதனால் இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும் உக்கிரமடைந்துள்ளது. தெற்கு காசாவை பிரதான இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் அங்கு உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் போர் காரணமாக காசாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமார் 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். சுமார் 11 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து