முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      இந்தியா
drone 2023-06-06

Source: provided

சண்டிகர் : பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோனை பி.எஸ்.எப். வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தின் மாபோக் கிராமம், இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 10.10 மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்த கிராமத்தை நோக்கி டிரோன் ஒன்று பறந்து வந்துள்ளது. இதைப் பார்த்த எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தி செயல் இழக்க செய்தனர்.

வயல்வெளியில் விழுந்த டிரோனை இன்று காலை எல்லை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். அது சீனாவில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் ஒரு பொருளை பிடிப்பதற்கும், அதை விடுவதற்குமான தொழில் நுட்பத்தில் டிரோன் வடிவமைக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல் இந்த டிரோனை அனுப்பி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதைப்பற்றி பஞ்சாப் எல்லை பாதுகாப்புப் படையினர் எக்ஸ் வலைதளத்தில் டிரோனின் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளனர். இதேபோல் இந்த வாரம் அமிர்தசரசில் பறந்த டிரோன் ஒன்றை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து