முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கர் முதல்வராகிறார் விஷ்ணு தியோ சாய்?

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      இந்தியா
Vishnu-Deo-Sai 2023-12-10

Source: provided

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநில புதிய முதல்வராக பா.ஜ.க.வை சேர்ந்த விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, நவம்பர் 7 மற்றும் 17-ம் தேதிகளில்  இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து. கடந்த 3-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் ஆளுங்கட்சியாக இருந்த  காங்கிரஸ், 35 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வி அடைந்தது. பெரும்பான்மையை கடந்து, 54 தொகுதிகளை வென்ற   பா.ஜ.க. மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது 

இந்நிலையில், சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில், சட்டசபைக்கு புதிதாக தேர்வாகியுள்ள பா.ஜ.க.  எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் மத்திய மேற்பார்வையாளர்களான மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா,  சர்பானந்த சோனவால், பா.ஜ.க. பொதுச்செயலர் துஷ்யந்த் குமார் கவுதம் ஆகியோர் பங்கேற்றனர். 

இவர்கள்,  புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து, பா.ஜ.க. எம்.எல்.ஏ.,க்களிடம் தனித்தனியாகவும், கூட்டமாகவும்  கேட்டறிந்தனர். அதை தொடர்ந்து இந்த கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநில புதிய முதல்வராக விஷ்ணு தியோ சாய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து