முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் விதிமீறல் வழக்கில் நடிகை ஜெயபிரதாவுக்கு பிடிவாரண்டு 6-ம் தேதி ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      இந்தியா
Jayapratha 2023 08 11

Source: provided

லக்னோ : தேர்தல் விதிமீறல் வழக்கில் தொடர்ந்து ஆஜராகாததால் நடிகை ஜெயபிரதாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதி, வரும் 6-ம் தேதி அவரை ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். 

உத்தர பிரதேச மாநிலத்தில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ராம்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நடிகை ஜெயப்பிரதா போட்டியிட்டார். 

அப்போது தேர்தல் விதிகளை மீறியதாக அவர் மீது கெமாரி, சுவார் போலீஸ் நிலையங்களில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் ராம்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. 

வழக்கு தொடர்பாக அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் கோர்ட்டில் நடிகை ஜெயப்பிரதா ஆஜராகவில்லை. இதனால் அவரை தலைமறைவு குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் ஜெயப்பிதாவை கைது செய்து வருகிற 6-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

நடிகை ஜெயப்பிரதா கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் அதே தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து