முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்: வரும் 4-ம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குடும்பத்தோடு கொடைக்கானல் செல்கிறார். முதல்வரின் பயணத்தை அடுத்து அங்கு வரும் 4-ம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பாக தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கடும் வெயிலில் பயணம் செய்து, தீவிரமாக ஓட்டு வேட்டையாடினார். வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஆய்வு கூட்டத்தை நடத்தி, அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரும் மே 1-ந் தேதி முதல் கடுமையான வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏற்கனவே வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இந்த அறிவிப்பு, மக்களை மேலும் அச்சுறுத்தி உள்ளது. இந்த நிலையில், நல்ல சீதோஷ்ணம் நிலவும் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) செல்கிறார்.

அதற்காக இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்கிறார். பின்னர் மதுரையில் இருந்து காரில் அவர் புறப்பட்டு கொடைக்கானலுக்கு செல்கிறார். மே 4-ந் தேதி வரை அவர் அங்கு தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் வருகிற மே 4-ந் தேதி வரை கொடைக்கானலில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பகுதிகளில் டிரோன்கள் மற்றும் பலூன்கள் பறக்கத் தடை விதித்து திண்டுக்கல் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து