முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 14 மே 2024      தமிழகம்
eps

Source: provided

சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார். அதை தொடர்ந்து இது தொடர்பான விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற தேர்தலையொட்டி மத்திய சென்னை தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கம் டாணா தெருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். 

அப்போது மத்திய சென்னை தொகுதி எம்.பி.யாக உள்ள தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீத நிதியை செலவு செய்யவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தயாநிதி மாறன் எம்.பி., எழும்பூர் 13-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கை தொடர்ந்து இருந்தார்.  

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எந்த ஆதாரங்களும் இல்லாமல் என் மீது அவதூறு பரப்பி உள்ளார். இதனால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக 24 மணி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். மன்னிப்பு கேட்காததால் எடப்பாடி பழனிசாமி மீது கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு எழும்பூர் 13-வது மாஜிஸ்திரேட்டு தர்மபிரபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முதல் விசாரணை என்பதால் எடப்பாடி பழனிசாமி நேற்று கோர்ட்டில் ஆஜராகி வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் வக்கீல் ஐ.எஸ். இன்பதுரை ஆஜரானார்.

எடப்பாடி பழனிசாமியின் வருகையையொட்டி எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. நிர்வாகிகளும் திரண்டிருந்தனர். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் (ஜூன்) 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து