முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்

செவ்வாய்க்கிழமை, 14 மே 2024      தமிழகம்
bus-2022 08 25

Source: provided

சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது. 

சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட மூன்று வசதிகள் மக்களுக்கு உள்ளன. ஆனால் இது மூன்றிற்கும் மக்கள் தனித்தனியாக டிக்கெட் எடுத்து வருகிறார்கள். 

மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழக  அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி மூன்றிலும் மக்கள் பயணிக்க முடியும். 

அதன்படி, சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரிய நிலையில் அடுத்த மாதம் இந்த திட்டம் செயலுக்கு வர உள்ளது. 

இந்நிலையில் இத்திட்டம் ஜூன் 2-வது வாரத்தில் அமலுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலம் பொதுப் போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் வழங்கப்பட உள்ளது. பிரத்யேக கார்டு வழங்கி, ரீசார்ஜ் செய்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து