முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 14 மே 2024      இந்தியா
Delhi-Municipal 2024-05-14

Source: provided

புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி. சுவாதி மாலிவால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷமிட்டு பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததை தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 

ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து தன்னை தாக்கியதாக அக்கட்சியின் பெண் எம்.பி. சுவாதி மாலிவால் நேற்று முன்தினம் டெல்லி போலீசிடம் முறையிட்டார். இந்த சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்த புகார் குறித்து விசாரித்து இன்னும் 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அப்போது பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆம் ஆத்மி எம்.பி சுவாதி மாலிவால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பட்டியலின மேயரை நியமிக்கக் கோரியும் முதல்வர்  கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷமிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து