முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னை கண்டு பா.ஜ.வுக்கு அச்சம்: பிரசாரத்தில் கெஜ்ரிவால் வியப்பு

செவ்வாய்க்கிழமை, 14 மே 2024      இந்தியா
Kejriwal 2023 04 16

Source: provided

சண்டிகர் : என்னை கண்டு பா.ஜ.வினர் அச்சமடைகின்றனர் என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கூறினார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், 50 நாள் சிறையில் இருந்த கெஜ்ரிவால் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார். ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் கெஜ்ரிவால் ரோட்ஷோ நடத்தினார். அவரை சாலையின் இருபுறமும் தொண்டர்கள் வரவேற்றனர்.

ரோடுஷோவில் கெஜ்ரிவால் பேசியதாவது: டெல்லி மக்களுக்கு எல்லா மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் நான் ஜெயிலுக்குப் போன பிறகு 15 நாட்கள் எனக்கு இன்சுலின் கூட கொடுக்கவில்லை.

என்னை கண்டு பயமா?தாமரை சின்னத்தின் பட்டனை அழுத்தினால் நான் சிறைக்கு செல்வேன். மக்கள் அனைவரும் ஆம்ஆத்மி கட்சி சின்னத்தின் பட்டனை அழுத்தினால், நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. மார்ச் 16ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

என்னை மார்ச் 21-ம் தேதி சிறையில் அடைத்தனர். தேர்தல் பிரசாரம் செய்ய விடாமல் தடுக்க சதி செய்தனர். இதற்கு அர்த்தம் என்னை கண்டு பா.ஜ.,வினர் அஞ்சுகின்றனர். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து