முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை

செவ்வாய்க்கிழமை, 14 மே 2024      தமிழகம்
NIA 2024-04-06

Source: provided

சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூர் ராமேஸ்வரம் கபே ஹோட்டல் குண்டுவெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் சென்னையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 2 மாதங்களுக்கு மேலாக குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிய, அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில், ராமேஸ்வரம் கபே ஹோட்டலில், கடந்த மார்ச் 1-ந் தேதி, குண்டு வெடிப்பு நடந்தது. இதுதொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்கள், மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில் பதுங்கி இருந்த, எஸ்.ஐ., பயங்கரவாதிகள் முஸாவீர் ஹுசைன் ஷாகிப் (30), அப்துல் மதீன் அகமது மதீன் முகமது தாஹா(30) ஆகியோரை கைது செய்தனர். இருவரையும், 10 நாள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.

இந்நிலையில் கைதான, 2 பேர் சென்னையில் தங்கி இளைஞர்களுக்கு பயங்கரவாத பயிற்சி, வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளித்துள்ளனர். அவர்கள் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. அந்த இருவருக்கு உதவியவர்களை என்.ஐ.ஏ., சென்னையில் தீவிரமாக தேடி வருகிறது.

இருவரின் வலது கரமாக, சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த, 33 வயது வாலிபர் ஒருவர் செயல்பட்டுள்ளார். அதேபோல, வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லையில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரும் அடைக்கலம் கொடுத்துள்ளார். இருவரும் தலைமறைவாக உள்ளனர். பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் துப்பு கிடைக்குமா? என என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து