முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செவ்வாய்க்கு மேலும் ஒரு விண்கலத்தை அனுப்புகிறது நாசா

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன். ஆக.22 - சமீபத்தில் கியூரியாசிட்டி என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாயில் தரையிறக்கிய நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம்  வருகிற 2016 ம் ஆண்டு மேலும் ஒரு விண்கலத்தை  அனுப்ப திட்டமிட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா? அல்லது  அங்கு  ஏற்கனவே ஏதேனும் உயிரினங்கள் வாழ்ந்து  அழிந்துள்ளனவா என்பதை கண்டறிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் பூமியிலிருந்து புறப்பட்டு  சுமார் 8 மாதங்கள் கழித்து  கடந்த மாதம் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு குறித்து  அரிய தகவல்களை கியூரியாசிட்டி விண்கலம் பூமிக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிகரமான செவ்வாய் பயண திட்டத்திற்கு அடுத்தபடியாக 2016 ல் மேலும் ஒரு  விண்கலத்தை  அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

இன்சைட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் உட்புறங்களை ஆராய்ந்து அரிய தகவல்களை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நில அமைப்பு மற்றும்  அடுக்குகளில் பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பதை இந்த விண்கலம் கண்டறியும். மேலும் கிரகங்கள் எப்படி தோன்றின. அவை எப்படி தன்னை தானே  சுற்றிக் கொண்டு பரிணாம வளர்ச்சி பெறுகின்றன என்பது குறித்த ஆய்வுகளுக்கு  இந்த இன்சைட் விண்கலம் அளிக்கும் தகவல்கள் உதவிகரமாக இருக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதுதான் நாசாவின் தலையாய நோக்கம். செவ்வாய் கிரகத்தின் மர்ம முடிச்சுக்களை அவிழ்ப்பதுதான்  முக்கிய நோக்கம். வருங்காலத்தில் செவ்வாய்  கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதற்கான அடித்தட்டு பணிகளுக்கு  இந்த இன்சைட் விண்கலம் உதவிகரமாக இருக்கும் என்று  நாசா தலைமை நிர்வாகி  சார்லஸ் போல்டன்  கூறினார். கியூரியாசிட்டி  விண்கலம் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியதை அடுத்து  மேலும் ஒரு விண்கலத்தை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. இதே போல மேலும் மேலும் பல செவ்வா? பயணங்கள் தொடரும் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்