முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 2015: வெற்றிப் பயணத்தை மீண்டும் துவங்குமா சென்னை?

வெள்ளிக்கிழமை, 1 மே 2015      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத் - நடப்பு ஐ.பி.எல். 8வது தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 9-வது ஆட்டத்தில் இன்று  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.8வது ஐ.பி.எல். போட்டிகளில் டோணி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி அணி இதுவரை 8 ஆட்டங்களில் 6 வெற்றிகள், 2 தோல்விகள் என 12 புள்ளிகளுடன் இருக்கிறது.

சென்னை அணியில் ஸ்மித், மேக்குல்லம், ரெய்னா, டுபிளிசிஸ், பிராவே, ஜடேஜா, ஆசிஷ் நெக்ரா என வரிந்துகட்டும் வீரர்கள் உள்ளனர். கொல்கத்தாவுடனான போட்டியில் தோற்றதால் இன்று  வெற்றியைப் பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது சென்னை அணி.

டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டத்தில் 3 வெற்றி, 4 தோல்வி பெற்று இருக்கிறது. இந்த அணியில் ஷிகர் தவான், ஸ்டெயின், பெளல்ட், புவனேஸ்வர்குமார், ரவி போபாரா போன்ற வீரர்கள் உள்ளனர். ஐதராபாத் அணி கடந்த லீக் ஆட்டத்தில் சென்னையிடம் 45 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து