முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பேத்கர்–பெரியார் அமைப்பு தடை ரத்து: இளங்கோவன் வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 9 ஜூன் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்ட அனாமதேய கடிதத்தின் அடிப்படையில் கிண்டியில் உள்ள இந்திய தொழில் நுட்ப கழகத்தில் இயங்கி வந்த அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டத்தின் அங்கீகாரம் எந்த விசாரணையும் மேற்கொள்ளலாம் ரத்து செய்யப்பட்டது.

இந்த அநீதியை எதிர்த்து முதலில் குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி இப்பிரச்சினை குறித்து கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். நாடு முழுவதும் எதிர்ப்பு அதிகரித்ததன் விளைவாக மத்திய மனித வளத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் கிண்டியில் உள்ள இந்திய தொழில் நுட்ப கழகம், அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது. இந்த முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக வரவேற்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து